
காஜாங், ஏப்ரல்-4-சிலாங்கூர், காஜாங்கில் உள்ள ஒரு சுயசேவை சலவைக் கடையில், பூனைக்குட்டி சித்ரவதை செய்யப்பட்ட சம்பவம் சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
40 வயது ஆடவர், அந்த பூனைக்குட்டியை சுவரிலும் மெத்தையிலும் பலமுறை அடிக்கும் காட்சி அடங்கிய 59 வினாடி வீடியோ வைரலாகி, பொது மக்களின் கடும் கண்டனத்தை கிளப்பியுள்ளது.
இச்சம்பவம் ஏப்ரல் 2-ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
கால்நடை சேவைத் துறை அதிகாரிகள் சம்பவத்திற்குப் பிறகு, பாதிக்கப்பட்ட பூனைக்குட்டியையும், சந்தேக நபரின் கைப்பேசியையும் பறிமுதல் செய்துள்ளனர்.
சந்தேக நபர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க விலங்கின ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
2015 விலங்கு நலச் சட்டத்தின் கீழ், குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 100,000 ரிங்கிட் அபராதமும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம்.



