
அரிசோனா, ஏப்ரல்-5-30 ஆண்டுகளாக அமெரிக்காவில் நீடித்த ஒரு மர்மம், பெரும் ஆச்சரியத்துடன் முடிவுக்கு வந்துள்ளது.
ஆம், 1994-ஆம் ஆண்டு 13 வயதில் காணாமல் போன கிறிஸ்டினா மரி பிளாண்டே (Christina Marie Plante), 32 ஆண்டுகளுக்குப் பிறகு உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
அரிசோனா மாநிலத்தில், தனது குதிரையைப் பார்த்துவிட்டு வீடு திரும்பும் வழியில் சிறுமி கிறிஸ்டினா காணாமல் போனார்.
அவர் மாயமானது சந்தேகத்தை ஏற்படுத்தியதால் ஒரு மாநிலம் முழுவதும் தேடுதல் நடத்தப்பட்டது.
பல ஆண்டுகளாக போஸ்டர்கள், தரவுத்தளங்கள், விசாரணைகள் தொடர்ந்து நடந்தன.
இப்படியே 32 ஆண்டுகள் உருண்டோடியது தான் மிச்சம்.
ஆனால், இப்போது அதிகாரிகள், கிறிஸ்டினா உயிருடன் இருப்பதை உறுதிப்படுத்தி, குடும்பத்தாரை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளனர்.
புதிய தொழில்நுட்ப முன்னேற்றங்கள் வழிகாட்டியதால், துப்புக் கிடைத்தாக போலீஸ் கூறியது.
என்றாலும், அவர் எங்கு, எப்போது கண்டுபிடிக்கப்பட்டார் என்பதை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.
கிறிஸ்டினாவின் தனியுரிமையை மதிக்கும் வகையில் கூடுதல் விவரங்கள் மறைக்கப்பட்டுள்ளன.
32 ஆண்டுகளுக்குப் பிறகு உயிருடன் இருப்பது, காணாமல் போன குழந்தைகளின் குடும்பங்களுக்கு புதிய நம்பிக்கையை அளிப்பதாகக் கூறப்படுகிறது.
இது அமெரிக்காவின் மிகப்பெரிய அதிர்ச்சி தரும் ‘கண்டுபிடிப்புகளில்’ ஒன்றாகும் என்றும் பாராட்டப்படுகிறது.



