Latestமலேசியா

புந்தோங்கில் வெட்டுக்காயங்களுடன் ஆடவர் உயிரிழப்பு

ஈப்போ, ஏப்ரல்-7-ஈப்போ, புந்தோங்கில் நேற்றிரவு நட்ட நடு சாலையில் ஆடவர் ஒருவர் வெட்டுக்காயங்களுடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

பொது மக்கள் தகவல் வழங்கியதைத் தொடர்ந்து, போலீஸார் சம்பவ இடம் விரைந்து விசாரணையைத் தொடங்கினர்.

கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பல காயங்கள் அவரது உடலில் காணப்பட்டன.

இறந்துபோன 25 வயது அவ்விளைஞர், முன்னதாக கார் வாடகைக் கடையில் நண்பர்களுடன் இருந்தபோது, அங்கு வந்த பாராங் கத்தி கும்பலால் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

உடனிருந்த அவரின் நண்பர்கள் சிலரும் அதில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

அந்த கார் வாடகை இடத்தின் பாதுகாவலராக வேலை செய்து வரும் 23 வயது ஆடவர் விசாரணைக்காகக் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் திட்டமிட்ட தாக்குதலாக இருக்கலாம் என தொடக்கக் கட்ட விசாரணைகள் தெரிவிக்கும் நிலையில், எஞ்சிய சந்தேக நபர்களை ஈப்போ போலீஸ் தேடி வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!