
தெலுக் இந்தான், ஏப்ரல்-12-மக்கள் நலனையும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்தும் நோக்கில், மடானி அரசாங்கம் 47.44 மில்லியன் ரிங்கிட் நிதியை தெலுக் இந்தான் தொகுதிக்கு ஒதுக்கியுள்ளது.

இந்நிதி ‘Sentuhan Kasih KPKT 2026’ பயணத் திட்டத்தின் கீழ் 8 முக்கிய திட்டங்களுக்கு வழங்கப்படுவதாக, தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினரும் KPKT எனப்படும் வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சருமான ஙா கோர் மிங் தெரிவித்தார்.

இதில், 6.87 மில்லியன் ரிங்கிட் KPKT மூலம் பொது மக்களுக்கான வசதிகள், Rumah Mesra Rakyat வீடுகளின் கட்டுமானம், பூங்கா மேம்பாடு மற்றும் குடியிருப்பு பராமரிப்பு பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், கல்வி அமைச்சின் கீழ், Kampung Bahagia தேசிய மற்றும் இடைநிலைப் பள்ளிகளில் புதிய கட்டடங்கள் அமைப்பதற்காக 40.5 மில்லியன் ரிங்கிட் வழங்கப்பட்டுள்ளது.

இது தவிர, தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலகம் சார்பில் 24 பள்ளிவாசல்களுக்கு 72 ஆயிரம் ரிங்கிட் நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும் ஙா கோர் மிங் கூறினார்.
மக்கள் நலன், கட்டமைப்பு வளர்ச்சி மற்றும் சமூக ஒற்றுமை ஆகியவை நாட்டின் முன்னேற்றத்திற்கு முக்கியம் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சி Aidilfitri Sentuhan Kasih விழாவுடன் நிறைவடைந்தது.



