
கோத்தா பாரு, ஏப்ரல்-24-கிளந்தான், கோத்தா பாருவில் மனநலம் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மகனால் தாக்கப்பட்ட 83 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Baung Bayam பகுதியில் திங்கட்கிழமை காலை 11.30 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
41 வயது மகன் கழிவறையில் இருந்தபோது, அவரது தந்தை அவரை திட்டியதாகக் கூறப்படுகிறது.
தந்தை திட்டியதால் அதிர்ச்சியடைந்த மகன், திடீரென அவரை ஓங்கி குத்தியுள்ளார்.
இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த முதியவரின் தலை சிமெண்ட் தரையில் பலமாக மோதியது.
இதில் மண்டை ஓடு பிளந்து, மூளையில் உள் இரத்தப்போக்கு ஏற்பட்டதால், Raja Perempuan Zainab மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அவர், செவ்வாய்க்கிழமை மாலை உயிரிழந்தார்.
கைதுச் செய்யப்பட்டுள்ள சந்தேக நபர், மனநல பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்படவுள்ளதாக என கிளந்தான் போலீஸ் கூறியது.
கொலைக் குற்றங்களுக்கான குற்றவியல் சட்டத்தின் 302-ஆவது பிரிவின் கீழ் இச்சம்பவம் விசாரிக்கப்படுகிறது.



