
பத்து பஹாட், மே-6-ஜோகூர் பத்து பஹாட்டில் ஒரு பள்ளி நுழைவாயிலில் நிகழ்ந்த விபத்தில், இரண்டாம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாரிட் சுலோங்கில் உள்ள Sri Maimon தேசியப் பள்ளியில் நேற்று மதியம் 12.40 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்தது.
8 வயதான Nur Aini Umairah Fareez, பள்ளி முடிந்து வெளியேறியபோது, ஒரு வேனால் மோதப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.
அப்போது அந்த வேன் பள்ளியினுள் பொருட்களை இறக்கி விட்டு, நுழைவாயிலில் வெளியேறிக் கொண்டிருந்தது.
இந்த சம்பவத்தை பள்ளி முடியும் நேரத்தில் இருந்த பெற்றோர் சிலர் நேரில் கண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாணவியின் உடல் சவப்பரிசோதனைக்காக சுல்தானா நோரா இஸ்மாயில் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், விபத்து தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



