Latestமலேசியா

எஸ்.பி.எம் மாணவர்களுக்கான உயர்க்கல்வி கழகங்களின் விண்ணப்ப முடிவுகள் மே 22ஆம் தேதி வெளியாகும்

புத்ரா ஜெயா , மே-7- எஸ். பி.எம் தேர்வு முடிவைத் தொடர்ந்து பொதுப் பல்கலைக்கழகங்கள், பொது உயர் கல்விக் கழகங்கள் மற்றும் மாரா உயர் கல்விப் பிரிவு ஆகியவற்றில் தங்கள் படிப்பைத் தொடர்வதற்கான விண்ணப்பம் செய்தவர்களின் முடிவுகள் மே 22 ஆம்தேதியன்று அறிவிக்கப்படும் என உயர் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

2026/2027 கல்வியாண்டிற்கான சான்றிதழ், அடிப்படை மற்றும் டிப்ளோமா பட்டப் படிப்பு கல்வியை மேற்கொள்வதற்கான விண்ணப்பத்தின் முடிவுகளை மே 31 ஆம் தேதியன்று மதியம் மதியம் 12 மணி முதல் மாலை 5 மணி வரை சரிபார்க்கலாம்.

upu.mohe.gov.my என்ற அதிகாரப்பூர்வ UPU இணையதளம் வழியாகவும், அத்துடன் UPUPocket மற்றும் MyGov மொபைல் செயலிகள் வழியாகவும் இந்த முடிவுகளை ஆன்லைனில் தெரிந்துகொள்ளலாம்.

உயர்க்கல்வி நிலையங்களில் இணைவும் வாய்ப்பை உறுதிப்படுத்தும் முடிவுகள் முறையே பொது பல்கலைக்கழகங்கள் , பொது உயர்க்கல்வி மற்றும் MARA BPT அகப்பக்கங்கள் வழியாக மே 23 முதல் 31 வரை கிடைக்கும் என்று உயர்க்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட காலத்திற்குள் ஏற்பு உறுதிசெய்யப்பட்ட பிறகு, தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மே 26 ஆம்தேதி முதல் அதிகாரப்பூர்வமாக இணைவதற்கான கடிதங்கள் நிர்ணயிக்கப்பட்ட கால அவகாசத்திற்குள் வழங்கப்படும் .

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!