Latestஉலகம்மலேசியா

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுக்கு ரஷ்யாவின் அதிநவீன Aurus கார் பரிசு; மோஸ்கோவில் உற்சாக வரவேற்பு

மோஸ்கோவ், மே-11-மோஸ்கோவுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுக்கு, ரஷ்ய அரசு அந்நாட்டின் மிக உயரிய Aurus Senat இரக சொகுசு காரைப் பரிசாக வழங்கியுள்ளது.

​மோஸ்கோவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க வாகன அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டபோது இந்த அன்பளிப்பு வழங்கப்பட்டது.

ரஷ்யாவின் வெற்றி தினக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளச் சென்ற மாமன்னருக்கு, இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான நட்புறவை வெளிப்படுத்தும் விதமாக இந்த கார் வழங்கப்பட்டது.

​ரஷ்யாவின் Rolls-Royce என அழைக்கப்படும் இந்த Aurus கார், அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புட்டின் பயன்படுத்தும் அதே இரகத்தைச் சேர்ந்ததாகும்.

4.4 லிட்டர் V8 Hybrid இயந்திரம் மற்றும் மிக உயரிய பாதுகாப்பு வசதிகளைக் கொண்ட இந்த கார், ரஷ்யாவுக்கு வெளியே மிக அரிதாகவே மற்றவர்களுக்கு வழங்கப்படுகிறது.

இந்நிலையில், ​இந்தச் சந்திப்பின் போது, அடுத்தாண்டு மலேசியா மற்றும் ரஷ்யா இடையிலான 60 ஆண்டுகால அரச தந்திர உறவைக் கொண்டாடும் வகையில், அதிபர் புட்டினை மலேசியாவுக்கு வருகை தருமாறு மாமன்னர் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தப் பரிசு இரு நாடுகளின் புதிய உறவின் மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

மாமன்னரின் கார் சேகரிப்பில் இந்த அதிநவீன Aurus கார் ஒரு புதிய மகுடமாகத் திகழும்…

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!