ட்ரம்ப் கொலை முயற்சி வழக்கு: நீதிமன்றத்தில் குற்றத்தை மறுத்த சந்தேக நபர்

வாஷிங்டன், மே-12-அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் மீது கடந்த மாதம் நடத்தப்பட்ட கொலை முயற்சி தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர், கூட்டரசு நீதிமன்றத்தில் தன் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார்.
கலிஃபோர்னியாவைச் சேர்ந்த முன்னாள் ஆசிரியரான 31 வயது Cole Tomas Allen, வாஷிங்டன் நீதிமன்றத்தில் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்டார்.
அதிபரைக் கொல்ல முயன்றது உள்ளிட்ட 4 முக்கிய குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்ட நிலையில், அவரது வழக்கறிஞர் மூலம் தான் ‘குற்றமற்றவர்’ என்று வாதிட்டார்.
ஏப்ரல் 25-ஆம் தேதி வெள்ளை மாளிகை நிருபர்கள் சங்க விருந்து நிகழ்ச்சியின் போது இந்த தாக்குதல் முயற்சி நடைபெற்றது.
துப்பாக்கி மற்றும் கத்திகளுடன் பாதுகாப்பு வளையத்தை உடைத்து Allen நுழைந்ததாகவும், அந்த மோதலில் இரகசிய சேவை அதிகாரி ஒருவர் காயமடைந்ததாகவும் அரசுத் தரப்பு தெரிவித்துள்ளது.
Allen-னின் தரப்பு வழக்கறிஞர்கள், இந்த வழக்கில் சில நீதித்துறை அதிகாரிகளின் தலையீட்டைத் தவிர்க்கக் கோரியுள்ளனர்.
காரணம், தாக்குதல் நடந்த போது அந்த அதிகாரிகளும் அதே நிகழ்ச்சியில் இருந்ததே ஆகும் என அவர்கள் வாதிடுகின்றனர்.
தற்போது ஜாமீன் வழங்கப்படாமல் காவலில் வைக்கப்பட்டுள்ள Allen-னுக்கு, குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.



