Latestமலேசியா

இந்திய தூதர் தூதர் பி.என் ரெட்டி பிரதமர் அன்வார் பிரியாவிடை சந்திப்பு

கோலாலம்பூர், மே 18 – மலேசியாவில் தனது பதவிக்காலத்தை விரைவில் நிறைவு செய்யவிருக்கும் இந்திய தூதர் பி.என். ரெட்டி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரிடம் பிரியாவிடை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

இந்தச் சந்திப்பு, மலேசியா மற்றும் இந்தியா இடையேயிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும் உதவியதோடு தற்போது இந்த உறவுகள் விரிவான பயனுள்ள ஒத்துழைப்பு நிலையை எட்டியுள்ளதாக டத்தோஸ்ரீ அன்வார் தெரிவித்தார்.

இதன் மூலம், வர்த்தகம், இலக்கவியல் , செயற்கை நுண்ணறிவு , உணவுப் பாதுகாப்பு, கல்வி மற்றும் மக்கள்-மக்களுக்கு இடையிலான உறவுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான இரு நாடுகளின் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை இது பிரதிபலிக்கிறது என X தளத்தில் வெளியிட்ட அறிக்கையில் அன்வார் சுட்டிக்காட்டினார்.

2025-ஆம் ஆண்டில் 18.59 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ள இருதரப்பு வர்த்தகத்தின் நேர்மறையான வளர்ச்சி குறித்தும் சுட்டிக்காட்டிய அன்வார் , இதன் மூலம், தெற்காசியாவில் மலேசியாவின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளியாக இந்தியா தொடர்ந்து நீடிக்கிறது என்றும் குறிப்பிட்டார்.

அண்மையில் கோலாலம்பூரில் நடைபெற்ற மலேசியா-இந்தியா இலக்கவியல் மன்றத்தின் முதல் கூட்டம் மற்றும் மலேசியா-இந்தியா செயற்கை நுண்ணறிவு மாநாடு ஆகியவற்றின் மூலம், டிஜிட்டல் மற்றும் புதிய தொழில்நுட்பத் துறையில் ஒத்துழைப்பு ஊக்கமளிக்கும் முன்னேற்றங்களைக் காட்டுகிறது.

இதன்வழி இரு நாடுகளுக்கும் பரஸ்பர நன்மை, வட்டார நிலைத்தன்மை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்காக மலேசியா இந்த நல்லுறவுகளைத் தொடர்ந்து வலுப்படுத்தும் என்றும் அன்வார் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!