
குவாலா திரெங்கானு, மே 20 – நேற்று குவாலா திரெங்கானு ஜாலான் லோசொங் ஃபெரி (Jalan Losong Feri) பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில், 18 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளான்.
அந்த இளைஞன் தனது தந்தையுடன் வேனில் பயணித்துக் கொண்டிருந்தபோது, சாலையின் நடுவில் இருந்த பொதுப்பணித்துறையின் மின்கம்பம் வேனை துளைத்துச் சென்றதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே அவன் உயிரிழக்க நேர்ந்தது.
குவாலா திரெங்கானு, மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி அஸ்லி முகமட் நூர் (ACP Azli Mohd Noor) கூறுகையில், Volkswagen கார் ஒன்று குவாலா திரெங்கானுவிலிருந்து (Kuala Terengganu) லோசோங்கிலிருக்கும் அருங்காட்சியகத்திற்கு சென்று கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதி, பின்னர் எதிர்புற பாதையில் சென்ற வேனுடன் மோதியதாக தெரிவித்தார்.
அந்த காரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் பயணித்துள்ளனர். இந்நிலையில், உயிரிழந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த விபத்து தொடர்பாக சாலை போக்குவரத்து சட்டத்தின் கீழ் விசாரணை நடைபெற்று வருகிறது.



