
பொந்தியான், மே-22-ஜோகூர், பொந்தியான், பெக்கான் நானாஸில் உள்ள உணவகம் ஒன்றின் முன்னால், நேற்று அதிகாலை 22 வயது இளைஞர் ஒருவர் இரத்த வெள்ளத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
அவரது கைகள் மற்றும் கால்களில் கடுமையான வெட்டுக் காயங்கள் இருந்ததாக பொந்தியான் போலீஸ் கூறியது.
அதிகாலை 3 மணியளவில் கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடம் விரைந்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதை உறுதிப்படுத்தினர்.
இச்சம்பவம் குறித்து கொலைக் குற்றச்சாட்டின் கீழ், குற்றவியல் சட்டத்தின் கீழ் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலைக்கான பின்னணி மற்றும் குற்றவாளிகளைத் தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ள வேளை, இது குறித்து தகவல் தெரிந்த பொது மக்கள் உடனடியாகப் போலீஸாரைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.



