
கோலாலம்பூர், மே-23 – இன்று, மே 23-ஆம் தேதி… மலேசிய வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒரு மிக முக்கியமான நாளாகும்.
ஆம், மலேசிய எவரெஸ்ட் குழுவினர் உலகின் மிக உயர்ந்த எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்து இன்றோடு 29 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
1997-ஆம் ஆண்டு இதே நாளில், டத்தோ எம். மகேந்திரன் மற்றும் டத்தோ என். மோகனதாஸ் இருவரும் எவரெஸ்ட் சிகரத்தை வெற்றிகரமாக வென்ற முதல் மலேசியர்கள் மற்றும் முதல் தென்கிழக்காசியர்கள் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தனர்.
இந்த 29-ஆவது ஆண்டு நிறைவு கொண்டாட்டத்திற்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்புதான், அதாவது மே 18-ஆம் தேதியன்று, மலேசிய மலையேறும் வீரர் Kicok எனப்படும் Mohd Hafiz Bachok எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து அசத்தியுள்ளார்.
இதன் மூலம், எவரெஸ்ட் சிகரத்தை வென்ற 30-ஆவது மலேசியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
29 ஆண்டுகள் கடந்தாலும், அன்று 1997-ல் நம் தேசியக் கொடியை மகேந்திரனும் மோகனதாஸும் எவரெஸ்ட் உச்சியில் ஏற்றித் தொடங்கிய அந்த ‘Malaysia Boleh’ உத்வேகம், இன்றும் எதிர்கால மலேசியத் தலைமுறையினருக்கும் ஒரு பெரும் வழிகாட்டியாகத் திகழ்கிறது என்பதில் ஐயமில்லை…



