Latestமலேசியா

டாக்டர் லிங்கேஸ்வரன் இரண்டாம் தவணையாக செனட்டராகப் பதவியேற்பு

கோலாலாம்பூர், மே-25-Dr லிங்கேஷ்வரன் ஆர் அருணாச்சலம், இரண்டாம் தவணையாக மேலும் 3 ஆண்டுகளுக்கு செனட்டராக இன்று பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

நாடாளுமன்ற மேலவையில் நடைபெற்ற பதவியேற்புச் சடங்கில் சபாநாயகர் டத்தோ Awang Ali Basah முன்னிலையில் அவர் பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

அண்மையில் பினாங்கு சட்டமன்றம் லிங்கேஷ்வரை இரண்டாம் தவணைக்கு செனட்டராக முன்மொழிந்ததை அடுத்து, இன்று அவர் முறைப்படி பதவியேற்றார்.

பதவிவேற்புச் சடங்கில் அவரது குடும்பத்தாரோடு, DAP-PH மக்கள் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

துணையமைச்சர்கள் எம். குலசேகரன், லிம் ஹுய் யிங், செப்பூத்தே நாடாளுமன்ற உறுப்பினர் திரேசா கோக் உள்ளிட்டோரும் அவர்களில் அடங்குவர்.

பதவியேற்புச் சடங்குக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய லிங்கேஷ்வரன், இப்பொறுப்பை திறம்பட ஆற்றுவேன் என்றும், மக்கள் குரலாக மேலவையில் ஒலிப்பேன் என்றும் உறுதியளித்தார்.

சுங்கை பாக்காப் மருத்துவமனையின் முன்னாள் இயக்குநருமான லிங்கேஷ்வரன், இதுநாள் வரை மேலவை உறுப்பினராக மருத்துவப் பணியாளர்கள், தாதியர்கள் உள்ளிட்டோரின் நலன்களுக்காக வலுவாகக் குரல் கொடுத்தவர் ஆவார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!