Latestஅமெரிக்காஉலகம்

அடுத்த மாதம் 80வது பிறந்தநாளைக் கொண்டாடவுள்ள நிலையில், தாம் முழுமையான ஆரோக்கியத்துடன் இருப்பதாக அதிபர் டிரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன், மே-28-அடுத்த மாதம் தனது 80வது பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில், தனது மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு முழுமையான ஆரோக்கியத்துடன் இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப்(Donald Trump) கூறியுள்ளார்.

வாஷிங்டனில் உள்ள வால்டர் ரீட் ராணுவ மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் முடிவுகள் அனைத்தும் நன்றாக இருந்ததாக அவர் தெரிவித்தார்.

வெள்ளை மாளிகைக்குத் திரும்பும் வழியில், (Truth Social) என்ற சமூக ஊடகப் பக்கம் வழியாக அவர் தனது உடல்நிலை குறித்த தகவலை அறிவித்தார்.

பின்னர் வெள்ளை மாளிகை, ‘நல்ல உடல்நலப் பதிவு’ என்ற குறிப்புடன் டிரம்பின் புகைப்படத்தை சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டது.

மருத்துவப் பரிசோதனையின் முடிவுகள் குறித்த சுருக்கமான அறிக்கை அடுத்த சில நாட்களில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரம்பின் கையில் ஏற்பட்ட காயங்கள் குறித்த ஊகங்கள் மற்றும் பல அதிகாரப்பூர்வ சந்திப்புகளின் போது அவர் தூக்கக் கலக்கத்துடன் காணப்பட்டார் என்று வெளியான தகவலைத் தொடர்ந்து அவரது உடல்நிலை மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!