
மலாக்கா, மே-29 – மலாக்கா பண்டா ஹிலிரில் நடந்த அதிர்ச்சி சம்பவத்தில் 14 வயது சிறுமி, காதலனைச் சந்திக்க மாற்றான் தாய் தடை விதித்ததால், மன அழுத்தத்தில் கத்தியால் தனது கை மற்றும் கழுத்தை காயப்படுத்திக் கொண்டார்.
இச்சம்பவம் ஞாயிறு இரவு 10.30 மணியளவில் நடந்ததாக போலீஸ் கூறியது.
சிறுமி உடனடியாக மலாக்கா மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்.
தற்போது அவரது நிலைமை சீராக உள்ளது.
போலீஸ் விசாரணையில், சிறுமி mushroom சுவை கொண்ட போதைப்பொருள் கலந்த வேப் புகைத்திருந்தது தெரியவந்துள்ளது.
பிப்ரவரியில் இரண்டாம் படிவ மாணவனான காதலனுடன் அறிமுகமான பிறகே, அவர் வேப் பழக்கத்திற்கு ஆளானதாகவும், காதலன் தொடர்ந்து வேப் வழங்கியதாகவும் மாற்றான் தாய் கூறியுள்ளார்.
இந்நிலையில், குழந்தை வளர்ப்பில் அலட்சியம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



