Latestமலேசியா

இன்று முதல் சட்டம் அமுல்; மலேசியாவில் 16 வயதிற்கு உட்பட்டவர்களுக்குச் சமூக ஊடகக் கணக்குகள் தடை; அடையாள ஆவணம் கட்டாயம்

கோலாலாம்பூர், ஜூன் -1 – இன்று ஜூன் 1 முதல், 16 வயதிற்கு உட்பட்டவர்கள் புதிய சமூக ஊடகக் கணக்குகளைத் திறக்கத் தடை விதிக்கும் அதிரடிச் சட்டம் நாட்டில் அதிகாரப்பூர்வமாக அமுலுக்கு வந்துள்ளது.

மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான MCMC, ‘2025 இணையப் பாதுகாப்புச் சட்டத்தின்’ கீழ் கொண்டு வந்துள்ள புதிய விதிமுறைகளின்படி இத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 16 வயதிற்கு மேற்பட்டவர்கள் புதிய கணக்குகளைத் திறக்க இனி தங்களின் MyKad, கடப்பிதழ் அல்லது MyDigital ID போன்ற அதிகாரப்பூர்வ அரசாங்க அடையாள ஆவணங்களைச் சமர்ப்பித்துத் தங்களின் வயதை உறுதிப்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இவ்விதிமுறை புதிய பயனர்களுக்கு மட்டுமின்றி, ஏற்கனவே கணக்கு வைத்திருக்கும் தற்போதைய பயனர்களுக்கும் பொருந்தும் என்பதால், அவர்களும் தங்களின் அடையாளத்தை உறுதிச் செய்தாக வேண்டும்.

தவறினால் கணக்குகள் முடக்கப்படலாம்.

அதோடு, இணைய மோசடிகளைத் தடுக்க, விளம்பரதாரர்களும் தங்களின் அடையாளத்தை உறுதிப்படுத்திய பின்னரே சமூக ஊடகங்களில் கட்டண விளம்பரங்களை வெளியிட அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த விதிகளைப் பின்பற்றத் தவறும் சமூக ஊடக நிறுவனங்களுக்கு 10 மில்லியன் வெள்ளி வரை கடுமையான அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!