Latestமலேசியா

MyGOV Malaysia செயலியில் இலவசமாக 2026 உலகக் கிண்ணக் கால்பந்து போட்டி நேரலை; கோபிந்த் சிங் அறிவிப்பு

புத்ராஜெயா, ஜூன்-7-மலேசியக் கால்பந்து இரசிகர்கள், விரைவில் தொடங்கவிருக்கும் FIFA உலகக் கிண்ணப் போட்டியை அரசாங்கத்தின் MyGOV Malaysia செயலி மூலமாக இலவசமாக நேரலையில் கண்டு களிக்கலாம்.

MyDigital ID கணக்கு வைத்துள்ள பயனர்கள், இந்தச் செயலியின் புதிய நேரலை ஒளிபரப்பு வசதி (Live-streaming) மூலமாக, RTM நிறுவனத்தின் TV1, TV2 மற்றும் Okey TV அலைவரிசைகளின் உலகக் கிண்ண நேரலைகளைப் பார்க்க முடியும் என்று டிஜிட்டல் அமைச்சு அறிவித்துள்ளது.

​மலேசியர்கள் டிஜிட்டல் சேவைகளை மிக எளிதாகப் பெறுவதை உறுதிச் செய்வதற்காக, மடானி அரசாங்கம் மேற்கொண்டு வரும் தொடர் முயற்சியின் ஒரு பகுதியே இதுவென, அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.

​பல்வேறு அரசு நிறுவனங்களின் சேவைகளை ஒருங்கிணைக்க கடந்த 2025-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த MyGOV செயலி, தற்போது பயணக் கட்டுப்பாட்டு விவரங்கள் மற்றும் கோரப்படாதப் பணம் உள்ளிட்ட 19 அரசு நிறுவனங்களின் 51 சேவைகளை வழங்கி வருகிறது.

தற்போது இச்செயலியை 2.2 மில்லியனுக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர்.

​அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் கூட்டாக நடத்தப்படும் இந்த உலகக் கிண்ணக் கால்பந்து போட்டி, ஜூன் 11 முதல் ஜூலை 19-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது .

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!