
வாஷிங்டன், ஜூன்-10-மத்தியக் கிழக்கில் மீண்டும் போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், Hormuz நீரிணைப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க இராணுவத்தின் அதிநவீன ‘அப்பாச்சி’ ஹெலிகாப்டரை ஈரான் சுட்டு வீழ்த்தியுள்ளதாக அதிபர் டோனல்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
இதற்கு அமெரிக்கா நிச்சயமாக தகுந்த பதிலடி கொடுக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, ஈரானிய இலக்குகள் மீது அமெரிக்காவின் CENTCOM படைப்பிரிவு தற்காப்புத் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது.
பாதிக்கப்பட்ட ஹெலிகாப்டரில் இருந்த இரு அமெரிக்க வீரர்கள், ஓமான் கடற்பகுதியில் அதிநவீன ஆளில்லா தானியங்கி படகு மூலம் பத்திரமாக மீட்கப்பட்டு, தற்போது சீரான உடல்நலத்துடன் உள்ளனர்.
இரு நாடுகளுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியிருந்த வேளையில், இந்தத் தாக்குதல் கடந்த ஏப்ரல் மாதம் எட்டப்பட்ட தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தத்தை பெரும் கேள்விக்குறியாக்கியுள்ளது.



