Latestமலேசியா

நிபோங் தெபாலில் ரொஹிங்யா ஆடவன் மீது கொலை குற்றச்சாட்டு

நிபோங் தெபால், ஜூன் 11 – ரொஹிங்யா (Rohingya) இனத்தைச் சேர்ந்த 38 வயதான ஆடவன், கடந்த மே 31ஆம் தேதி சிம்பாங் எம்பாட் (Simpang Empat) பகுதியில் 31 வயதான மற்றொரு நபரைக் கொலை செய்ததற்காக நீதிமன்றத்தில் இன்று குற்றம் சாட்டப்பட்டுள்ளான்.

அதே சம்பவத்தில் ஒரு பெண்ணைக் கத்தியால் காயப்படுத்தியதாகவும் அவன் மீது மேலும் ஒரு குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. அக்குற்றச்சாட்டை அந்த ஆடவன் முழுவதுமாக மறுத்துள்ளான்.

கொலை வழக்கு உயர்நீதிமன்றத்தின் கீழ் வருவதால், குற்ற ஒப்புதல் பதிவு செய்யப்படவில்லை. அவனுக்கு ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில், வழக்கு ஆகஸ்ட் 7ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

இதற்கிடையில், சந்தேக ஆடவனின் மனைவி இருவரும் சட்டபூர்வ ஆவணங்களின்றி மலேசியாவில் தங்கியிருந்ததாக குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டனர். இந்த சம்பவம் குடும்பத் தகராறு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!