
லண்டன், ஜூன்-14 – லண்டனில் நள்ளிரவில் நடந்த பயங்கர கத்திக்குத்து சம்பவத்தில், 26 வயது இந்திய வம்சாவளி இளைஞர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு லண்டனின் Southall பகுதியில் இந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது.
அங்குள்ள ஒரு கடைக்கு வெளியே நின்று கொண்டிருந்த Gurbhej Singh என்ற 26 வயது இளைஞர் மீது மர்ம நபர்கள் கத்தியால் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த மீட்புக்குழுவினர், படுகாயமடைந்த குர்பேஜ் சிங்கை காப்பாற்ற முயன்றனர்.
எனினும், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த தாக்குதலில் 30 வயது மதிக்கத்தக்க மற்றொரு நபரும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இக்கொலை சம்பவம் தொடர்பாக சம்பவ இடத்திலேயே 7 பேரை போலீஸார் கைதுச் செய்தனர்.
விசாரணையின் முடிவில், அவர்களில் 6 பேர் விடுவிக்கப்பட்ட நிலையில், ஒருவரை மட்டும் ஜாமீனில் விடுவித்து பின்னர் போலீஸார் தீவிர விசாரணை நடத்தவிருக்கின்றனர்..
உயிரிழந்த குர்பேஜ் சிங்கின் உடலை மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டுச் செல்வதற்கும், அவரது இறுதிச் சடங்கு செலவுகளுக்காகவும் இணையம் மூலம் நிதி திரட்டும் பணியில் லண்டன் வாழ் இந்திய சமூகத்தினர் ஈடுபட்டுள்ளனர்.



