Latestமலேசியா

RM30 மில்லியன் வழக்கு: வினோத் பாலச்சந்திர சேகர் வழக்கில் அன்வார் சாட்சியமளிக்க தேவையில்லை; நீதிமன்றம் தீர்ப்பு

கோலாலாம்பூர், ஜூன்-19-தொழிலதிபர் வினோத் பாலச்சந்திர சேகர் மற்றும் அவரது மனைவி Winny Yeap-க்கு எதிரான 30 மில்லியன் ரிங்கிட் சிவில் வழக்கில், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சாட்சியமளிக்கத் தேவையில்லை என, கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பளித்துள்ளது.

தவறான பிரதிநிதித்துவம், மோசடி மற்றும் ஒப்பந்த மீறல் ஆகியவற்றை முன்வைத்து, கடந்த 2023-ஆம் ஆண்டு 10 முதலீட்டாளர்கள் மற்றும் வினோத்தின் முன்னாள் ஊழியர்கள் இருவரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் பிரதமர் அன்வாருக்கு அனுப்பப்பட்ட சம்மன் உத்தரவை இன்று இரத்துச் செய்து நீதித்துறை ஆணையர் Adam @ Edward Abdullah உத்தரவிட்டார்.

வாதி தரப்பினர் தாக்கல் செய்த புகைப்படங்கள் அல்லது சமூக ஊடகப் பதிவுகள் மூலம் பிரதமருக்கும் வினோத்துக்கும் இடையே உள்ள நட்பை மட்டுமே நிரூபிக்க முடிகிறதே தவிர, இந்த மோசடி வழக்கில் பிரதமருக்கு நேரடித் தொடர்பு இருப்பதற்கான எந்தவோர் ஆதாரமும் இல்லை என நீதிபதி சுட்டிக்காட்டினார்.

இதன் காரணமாக, தேவையற்ற முறையில் பிரதமரை நீதிமன்றத்திற்கு அழைப்பது முறையற்றது எனக் கூறி சம்மனை தள்ளுபடி செய்த நீதிமன்றம், வாதி தரப்பு பிரதமருக்கு 20,000 ரிங்கிட் செலவுத்தொகையாக வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!