Latestமலேசியா

கிள்ளானில் காதலியை தலையணையால் அமுக்கிக் கொன்ற வாலிபருக்கு 32 ஆண்டுகள் சிறை, 12 பிரம்படி

கிள்ளான், ஜூலை-1-கிள்ளானில் 4 ஆண்டுகளுக்கு முன்பு தனது காதலியை தலையணையால் அமுக்கிக் கொலை செய்த 23 வயது மெக்கானிக் ஒருவருக்கு 32 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 12 பிரம்படிகளும் விதித்து கிள்ளான் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24-ஆம் தேதி, கிள்ளான், கம்போங் ஸ்ரீ பண்டானில் உள்ள ஒரு வீட்டில் இந்த கொடூரச் சம்பவம் நிகழ்ந்தது.

தன்னை விட்டு பிரியமாட்டேன் என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்ததால் ஏற்பட்ட வாக்குவாதத்தில், 24 வயதுடைய நூருல் ஷஹிரா அப்துல்லா (Nurul Shahira Abdullah) என்ற பெண்ணை அமிருல் அமீன் அமிருடின் (Amirul Amin Amiruddin) என்ற அந்த வாலிபர் தலையணையால் முகம் மற்றும் வாயை அமுக்கிப் படுகொலை செய்தார்.

​பாதிக்கப்பட்ட பெண் மூச்சுவிட முடியாமல் திணறி, தனது போராட்டத்தை நிறுத்தும் வரை தலையணையை எடுக்கவில்லை என்று பிரதிவாதி நீதிமன்ற விசாரணையின் போது ஒப்புக்கொண்டார்.

முன்னதாக, இவருக்கு விதிக்கப்பட்டிருந்த 7 ஆண்டு காலக் குறைவான சிறைத்தண்டனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் இரத்துச் செய்ததைத் தொடர்ந்து, இந்த கொலைக் குற்றச்சாட்டின் கீழ் உச்சக்கட்ட தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!