Latestமலேசியா

பண்டார் சன்‌வே உணவகத்தில் மோதல்: கும்பலை போலீஸ் வலை வீச்சு

சுபாங் ஜெயா, ஜூலை-9-சிலாங்கூர், பண்டார் சன்‌வேயில் உள்ள உணவகம் ஒன்றில் நேற்று அதிகாலை ஏற்பட்ட கைகலப்பில் தொடர்புடைய கும்பலை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தவறான புரிதலால் இரண்டு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில், மூவர் இலேசாக காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றனர்.

சம்பவம் தொடர்பாக காலை 6 மணியளவில் போலீஸாருக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, சம்பவ இடத்தில் விசாரணை நடத்தப்பட்டதுடன், CCTV காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

இச்சம்பவம், ஆயுதங்களுடன் கலவரத்தில் ஈடுபட்டதாக குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுகிறது.

சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள போலீஸ் நிலையத்தை தொடர்புகொள்ளுமாறு போலீஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!