
மலாக்கா, ஜூலை-10 – மலாக்காவில் பள்ளி நிகழ்ச்சி ஒன்றின் போது, திடீரென மயங்கி விழுந்து 18 வயது படிவம் 6 மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கடந்த புதன்கிழமை, மலாக்கா Jalan Chan Koon Cheng பகுதியில் உள்ள ஓர் இடைநிலைப் பள்ளியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அந்த மாணவர், புறப்பாட நடவடிக்கைக்காக வகுப்பறைக்கு வெளியே தனது நண்பர்களுடன் வரிசையில் நின்றிருந்தபோது திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
உடனடியாக அவர் மலாக்கா மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டார்.
அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி புதன்கிழமை இரவு 7:11 மணியளவில் அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.
இந்த மாணவருக்கு இதுநாள் வரை எந்தவிதமான உடல்நலப் பிரச்னைகளும் இருந்ததில்லை என, அவரின் தாயாரை மேள்கோள் காட்டி போலீஸ் தெரிவித்துள்ளது.
சவப் பரிசோதனையில், இதயத் தமனியில் ஏற்பட்ட பிறவி குறைபாடு (Coronary artery anomalies) காரணமாகவே இந்த மரணம் நிகழ்ந்ததாக உறுதிச் செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து இது ஒரு இயற்கையான மரணம் என போலீஸ் வகைப்படுத்தியுள்ளது.



