Latestமலேசியா

மலாக்காவில் 10 சிறுவர்களுக்குப் பாலியல் தொல்லை: 36 வயது வியாபாரி கைது

மலாக்கா, ஜூலை-14 – மலாக்காவில் 10 சிறுவர்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகச் சந்தேகிக்கப்படும் 36 வயது வியாபாரி ஒருவரை போலீஸார் கைதுச் செய்துள்ளனர்.

​Duyong மற்றும் Telok Mas பகுதிகளில் இச்சம்பவம் நடந்துள்ளதை, மாநில போலீஸ் உறுதிப்படுத்தியது.

Taman Desa Duyong சமூக மண்டபத்தில் ஞாயிறு மாலை 6 மணியளவில் பொது மக்கள் அவரைப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

​8 முதல் 13 வயதுக்குட்பட்ட 10 சிறுவர்கள் இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மார்ச் மாதம் தொடங்கி இந்த மாதம் வரை இந்தச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

​விளையாடும் மைதானங்கள் அல்லது சூராவ் வழிபாட்டுத் தலங்களுக்கு வெளியே சிறுவர்களை அணுகி அந்நபர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர்களில் சிலரை அவர் நீண்ட நாட்களாகவே அறிந்திருக்கிறார்.

​சந்தேக நபர் தற்போது விசாரணைக்காக 7 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

2017-ஆம் ஆண்டு சிறார் பாலியல் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் விசாரணை நடைபெற்று வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!