
லண்டன், ஜூலை-21 – பிரிட்டனின் புதிய பிரதமராக ஆண்டி பர்ஹாம் (Andy Burnham) பொறுப்புக்கு வந்துள்ளார்.
பக்கிங்ஹாம் அரண்மனையில் மன்னர் மூன்றாம் சார்ல்ஸைச் சந்தித்து ஆட்சியமைப்பதற்கான அனுமதியைப் பெற்றதைத் தொடர்ந்து, அவர் நாட்டின் புதிய பிரதமரானார்.
கீர் ஸ்டார்மர் (Kier Starmer) பதவி விலகியதை அடுத்து, கடந்த 4 வாரங்களுக்கு முன்பு நாடாளுமன்றத்திற்குத் திரும்பிய முன்னாள் மான்செஸ்டர் மேயரான ஆண்டி பர்ஹாம், தொழிலாளர் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளில் பிரிட்டனின் ஏழாவது பிரதமராகப் பதவியேற்றுள்ள அவர், நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைத்தன்மையை மீட்கப் போவதாகத் தெரிவித்துள்ளார்.
பிரதமரான கையோடு தனது பாணியைக் காட்டத் தொடங்கியுள்ள பர்ஹாம், கடந்த காலத்தில் ஸ்டார்மர் கொண்டுவந்த சர்ச்சைக்குரிய 1.8 பில்லியன் பவுண்ட் மதிப்பிலான தேசிய டிஜிட்டல் அடையாள அட்டை (Digital ID) திட்டத்தை அதிரடியாக இரத்துச் செய்துள்ளார்.
அந்த நிதியை மக்களின் வாழ்க்கைச் செலவு அழுத்தங்களைக் குறைக்கப் பயன்படுத்தப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
பொருளாதார மந்தநிலை மற்றும் கடுமையான சவால்களுக்கு மத்தியில் பொறுப்பேற்றுள்ள பர்ஹாமின் இந்த ஆட்சி மாற்றம், தொழிலாளர் கட்சிக்குக் கிடைத்த கடைசி வாய்ப்பாகப் பார்க்கப்படுகிறது.



