Latestஉலகம்

உலகக் கோப்பை குறித்து அர்ஜென்டினா ரசிகர்களை ஏமாற்றிய ஸ்பெயின் விமானி

லண்டன், ஜூலை 21 – 2026 உலகக் கோப்பை காற்பந்து இறுதிப் போட்டிக்குப் பிறகு, ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த விமானி ஒருவர், விமானத்தில் இருந்த அர்ஜென்டினா ரசிகர்களிடம் செய்த நகைச்சுவை சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

விமானி முதலில், அர்ஜென்டினா உலகக் கோப்பையை வென்றதாக அறிவித்தார். இதைக் கேட்ட அர்ஜென்டினா ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்தனர்.

ஆனால், சில நொடிகளில் உண்மையில் ஸ்பெயின்தான் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று உலகச் சாம்பியன் ஆனது என்று விமானி கூறினார். இதனால் விமானத்தில் இருந்தவர்கள் அமைதியாகிவிட்டனர்.

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியது. சிலர் இதை வேடிக்கையாகக் கருதினாலும், மற்றவர்கள் இது அர்ஜென்டினா ரசிகர்களின் உணர்வுகளை புண்படுத்தும் நகைச்சுவை என்று விமர்சித்துள்ளனர். இதுவரை அந்த விமான நிறுவனம் மற்றும் விமானம் சென்ற இடம் பற்றிய தகவல் வெளியிடப்படவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!