Latestமலேசியா

பெண்களுக்கு எதிரான வன்முறை: பாதிக்கப்பட்டவர்களையே குற்றம் சுமத்தும் கலாச்சாரம் மாற வேண்டும் – WAO வலியுறுத்தல்

மலேசியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைக் கையாளும்போது, குற்றத்தைச் செய்தவரைக் கேள்வி கேட்காமல், பாதிக்கப்பட்ட பெண்களையே குற்றஞ்சாட்டும் ‘victim blaming’ கலாச்சாரம் தொடருவது பெரும் சவாலாக இருப்பதாக, மகளிர் உதவி அமைப்பான WAO கூறுகிறது.

எனவே, இந்நிலை மாற வேண்டும் என, அவ்வமைப்பின் ஆலோசக நிர்வாகி காந்திபன் வலியுறுத்தினார்.

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்துப் பெரும்பாலான மக்கள் அறிந்திருந்தாலும், பாதிக்கப்பட்ட பெண்களின் நடவடிக்கைகள், அவர்களின் உடை அல்லது அவர்கள் இருந்த சூழ்நிலையே குற்றத்திற்குக் காரணம் எனச் சிலர் இன்னும் சித்தரித்து வருகின்றனர்.

இது முற்றிலும் தவறானது என்கிறார் காந்திபன்.

இதுபோன்ற வன்முறைகளுக்கு பெண்களின் ஆடைகள் மீது பழிபோடும் சூழல் நிலவி வருகின்ற நிலையில், நெதர்லாந்தில் நடத்தப்பட்ட ஆய்வில் அக்கருத்து பொய்த்துப் போயிருப்பதை காந்திபன் சுட்டிக் காட்டினார்.

அதே சமயம், பெண்களுக்கு ஆயிரம் தடைபோடும் குடும்பங்களும், இந்தச் சமூகமும், ஆண்களிடம் கண்டிப்பைக் காட்டுவதில்லையே என்ற கருத்தையும் இவர் ஒப்புக் கொள்கிறார்.

எனவே, சிறுவயது முதலே ஆரோக்கியமான உறவுகள், சுய எல்லைகள் மற்றும் மற்றவர்களின் உடல் ரீதியான உரிமைகளை மதிப்பதைப் பற்றி வீடுகளிலும் பள்ளிகளிலும் கற்பிக்க வேண்டியது அவசியம் என காந்திபன் தெரிவித்தார்.

இவ்வேளையில், நாட்டில் 40 விழுக்காட்டுக்கும் குறைவானவர்களே உடலளவிலான சம்மதம் மற்றும் தற்காப்பு எல்லைகள் பற்றிய விழிப்புணர்வைக் கொண்டுள்ளதாக WAO ஆய்வில் தெரியவந்துள்ளது.

சில சமயம், இப்புகார்களைக் கையாளும் போலீஸ் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள் கூட இது குறித்து அறிந்து வைத்திருப்பதில்லை; எனவே அரசு சாரா இயக்கங்களுடன் ஒத்துழைப்பை மேற்கொண்டு ‘திறன் வளர்ப்புப் பயிற்சித் திட்டம்’ போன்றவற்றை முன்னெடுக்க அரசாங்கம் முன்வர வேண்டும் என காந்திபன் கூறுகிறார்.

இத்தகைய victim blaming கலாச்சாரமானது, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீண்டகால உளவியல் ரீதியான பாதிப்புகளையும், குற்ற உணர்ச்சியையும் ஏற்படுத்தி, அவர்கள் போலீஸ் நிலையத்தையோ அல்லது சட்ட உதவியையோ நாட அச்சப்படும் நிலையை உருவாக்குகிறது.

‘அதிகாரச் சமத்துவமின்மை’ அதாவது ஒருவரின் ஆதிக்கத்தால் மற்றொருவருக்கு ஏற்படும் இந்த வன்முறைச் சம்பவங்கள், யாரோ எவரால் ஏற்படுகிறது என்றே பெரும்பாலும் கருத்து நிலவுகிறது.

ஆனால் அது அப்படியல்ல என்கிறார் காந்திபன்…

இந்த Victim blaming கலாச்சாரம் குறித்து சம்பவங்களை எதிர்கொண்ட பல்வேறு அனுபவங்களையும் இந்நிலையை எப்படி மாற்றலாம் எனக் கேட்டதற்கு, அதிகாரத்தில் இருப்பவர்கள் விழிப்புணர்வுத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்; அதே சமயம், வீட்டிலிருந்து தொடங்கலாம் என்கிறார் காந்திபன்.

victim blaming கலாச்சாரம் குடும்ப வன்முறை, பாலியல் வன்முறை உள்ளிட்ட சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு வகையில் உதவிக் கரம் நீட்டி வரும் இந்த WAO அமைப்பைத் தொடர்புக்கொள்ள விரும்பினால், அவர்களின் hotline அழைப்பு எண்களையும் வாட்சப் எண்களையும் அழைக்கலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!