Latestமலேசியா

தியோமான் கடற்பகுதியில் ஸ்கூபா முக்குளிப்பின் போது பெண் மூழ்கி பலி

தியோமான், ஜூலை-23-தியோமான் கடல் பகுதியில் ஸ்கூபா முக்குளிப்பு பொழுதுபோக்கு நடவடிக்கையில் ஈடுபட்ட 31 வயது பெண்மணி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோலாலம்பூரைச் சேர்ந்த Heng Jing Ying என்ற பெண்மணி, 17.6 மீட்டர் ஆழத்தில் தனது குழுவினரிடமிருந்து பிரிந்து சென்றதாக ரொம்பின் மாவட்ட போலீஸ் கூறியது.

30 நிமிட தேடுதலுக்குப் பின் அவர் கடற்கரை மணல் பரப்பில் கண்டெடுக்கப்பட்டார்.

இரத்த நாளங்களில் காற்று அல்லது வாயு குமிழ்கள் நுழைந்ததன் காரணமாக ஏற்பட்ட சிக்கலால் அவர் உயிரிழந்ததாகப் சவப்பரிசோதனை உறுதிச் செய்துள்ளது.

இதில் குற்றச் செயல்கள் எதுவும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டு திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!