Latestமலேசியா

பினாங்கில் 4,625 கிராம் போதைப்பொருள் கடத்தியதாக பழைய இரும்பு வியாபாரி மீது குற்றச்சாட்டு

ஜார்ஜ்டவுன், ஜூலை-24-4,625 கிராம் heroin வகை போதைப்பொருளைக் கடத்தியதாக பினாங்கு, ஜார்ஜ்டவுன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் 34 வயதான பழைய பொருட்கள் வியாபாரி ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

மாஜிஸ்திரேட் எஸ். செல்வரஞ்சினி முன்னிலையில் அந்நபருக்கு எதிராக இரு முறை குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

அவ்வழக்கு உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குள் வருவதால் அவ்வாடவரிடமிருந்து வாக்குமூலம் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.

இம்மாதம் 17 ஆம் தேதி மாலை, Padang Kota Lamaவில் உள்ள Jalan Tun Syed Barakbah சாலையோரத்தில் போதைப்பொருளைக் கடத்தியதாக 1952 ஆம் ஆண்டின் அபாயகரமான போதைப்பொருள் சட்டத்தின் பிரிவு 39B-இன் கீழ் குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது.

குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படும். மரண தண்டனை விதிக்கப்படாவிட்டால் கசையடி தண்டனையும் விதிக்கப்படும்.

தவேந்திரனை உத்தரவாதத்தின் பேரில் விடுவிக்க அனுமதி வழங்கப்படவில்லை. வேதியியல் அறிக்கை தேவைப்படும் நிலையில், அவ்வழக்கு மீண்டும் அக்டோபர் 26 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!