
கோலாலம்பூர், ஜூலை-27-கோலாலம்பூர் பண்டான் இண்டாவில், ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வீசப்பட்ட கூர்மையான ஆயுதங்கள், கீழே உள்ள உணவகத்தின் படுதாவைத் துளைத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 7.20 மணிக்கு இச்சம்பவம் நிகழ்ந்ததாக, 47 வயது உணவக உரிமையாளர் கூறினார்.
கத்திகளும், கத்திரிக்கோல்களும் கீழே இருந்த உணவகத்தின் தடிமனான பிளாஸ்டிக் படுதாவைக் கிழித்துக் கொண்டு, வாடிக்கையாளர்கள் அமர்ந்திருந்த இடத்திற்கு மிக அருகில் வந்து விழுந்தன.
அதிர்ஷ்டவசமாக அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்த வாடிக்கையாளர்கள் உயிர் தப்பியுள்ளனர்.
சம்பவத்திற்குப் பொறுப்பானவர்கள் அடையாளம் காணப்பட்டு, கைதுச் செய்யப்பட்டிருப்பதாக அறியப்படுகிறது.
இதற்கு முன் மேல் மாடிகளிலிருந்து வெளிநாட்டவர்கள் குப்பைகளை வீசிய சம்பவங்கள் நடந்துள்ளன.
ஆனால், கத்திகளும் கத்திரிக்கோல்களும் வந்து விழுந்தது இதுவே முதன் முறை என உணவக உரிமையாளர் ஏமாற்றத்துடன் கூறினார்.



