Latestமலேசியா

பேராக்கில் மோட்டாரில் பயணித்த இரு இளம்பெண்கள் சாலை விபத்தில் பலி

பேராக், ஜூலை-28 – பேராக் தெலுக் இந்தான், ஜாலான் பாடாங் தேம்பாக் பகுதியில் நேற்று மாலை நிகழ்ந்த சாலை விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளம்பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

ஆரம்ப விசாரணையில், 28 வயதுடைய ஆடவர் ஓட்டிச் சென்ற கார், மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து, மோட்டார் சைக்கிள், மற்றொரு வாகனம் மற்றும் சாலையோரத்தில் இருந்த சிறுவன் மீது மோதியதாக போலீஸ் தெரிவித்துள்ளது.

இந்த விபத்தில் கார் ஓட்டுநரும் சிறுவனும் சிகிச்சைக்காக தெலுக் இந்தான் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

கார் ஓட்டுநர், சாலைப் போக்குவரத்து சட்டத்தின் கீழ் விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து தகவல் அறிந்தவர்கள் போலீசாரை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!