Latestஅமெரிக்காஉலகம்

2036-க்குள் பணத்திற்கு மதிப்பிருக்காது; AI தொழில்நுட்பத்தால் உலகப் பொருளாதாரம் மாறும் – இலோன் மாஸ்க் கணிப்பு

கலிஃபோர்னியா, ஜூலை-28-அடுத்த 10 ஆண்டுகளில் உலகப் பொருளாதாரத்தில் பணத்தின் முக்கியத்துவம் பெருமளவு குறைந்துவிடும் என, உலக மகா கோடீஸ்வரர் Elon Musk கணித்துள்ளார்.

​AI மற்றும் ரோபோட்டிக்ஸ் தொழில்நுட்பங்களின் அதீத வளர்ச்சியால், 2036-ஆம் ஆண்டுக்குள் மனிதர்களுக்குத் தேவையான பொருட்கள் மற்றும் சேவைகள் அதிகளவில் உற்பத்தி செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

​இயந்திரங்களே பெரும்பாலான உற்பத்திகளைச் செய்யும் போது, பணத்திற்கான தேவை இல்லாமல் போய் அனைவருக்கும் உயரிய வருமானம் சாத்தியமாகும்;

அதே சமயம், வேலை என்பது கட்டாயமில்லாமல் விருப்பத் தேர்வாக மாறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

​இருப்பினும், அதிநவீன AI தொழில்நுட்பத்தைக் கட்டுப்பாட்டில் வைப்பதே மனிதகுலத்திற்குப் பெரும் சவாலாக இருக்கும் என்றும் மாஸ்க் எச்சரித்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!