Latestமலேசியா

கூலிமில் மூன்று தொழிற்சாலைகளில் பரவிய தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராட்டம்

கூலிம், ஜூலை-28-கெடா, கூலிமில் Lunas, Jalan Makmur 7லில் உள்ள மூன்று தொழிற்சாலைகளில் இன்று அதிகாலை தீ பரவியது.

காலை 6.57 மணிக்கு அச்சம்பவம் குறித்து அவசர அழைப்பு வந்ததைத் தொடர்ந்து, Kulim மற்றும் Kulim Hi-Tech தீயணைப்பு நிலையங்களிலிருந்து வீரர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கெடா மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்தது.

‘வகுப்பு A’ என வகைப்படுத்தப்பட்டுள்ள அம்மூன்று தொழிற்சாலைகளிலும் பரவிய தீயில் அவை 50 முதல் 90 விழுக்காடு வரை சேதமடைந்திருப்பதாக மதிப்பிடப்படுகிறது.

பினாங்கில் உள்ள தீயணைப்பு நிலையங்களின் உதவியுடன், நான்கு நீர் பீய்ச்சி அடிக்கும் கருவிகளைப் பயன்படுத்தி தீயை அணைக்கும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுவரை எந்த உயிரிழப்பும் இல்லை. தீ விபத்திற்கான காரணம் விசாரிக்கப்பட்டு வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!