Latestஉலகம்

ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவதைத் தவிர வழியில்லை: ட்ரம்பிடம் நெத்தன்யாஹு எச்சரிக்கை

வாஷிங்டன், ஜூலை-29-ஈரான் மீது மீண்டும் இராணுவத் தாக்குதல் நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை என இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹு எச்சரித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்பை வெள்ளை மாளிகையில் நேரில் சந்தித்துப் பேசிய நெத்தன்யாஹு, ஈரானின் அணுசக்தி திட்டங்கள் குறித்த புதிய உளவுத்துறை அறிக்கைகளைச் சமர்ப்பித்தார்.

ஈரான் மீண்டும் கட்டமைத்துள்ள அணுசக்தி மையங்கள் மற்றும் அந்நாட்டின் நிலைத்தன்மையைப் பாதிக்கும் பிற இலக்குகள் மீது புதிய தாக்குதல்களை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்படலாம் என அதன்போது அவர் தெரிவித்தார்.

அதேவேளை, இந்த விவகாரத்தில் அமெரிக்காவுக்கு எவ்வித அழுத்தமும் தரவில்லை என்றும், இறுதி முடிவுகளை அதிபர் ட்ரம்பின் கைக்கே விட்டு விடுவதாகவும் நெத்தன்யாஹு கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எது எப்படி இருப்பினும் ஈரான் அணு ஆயுதம் பெறுவதைத் தடுப்பதில் இரு நாடுகளும் உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது.

அடுத்து ட்ரம்பின் நகர்வு என்னவாக இருக்கும் என்ற ஆர்வமும் அதிகரித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!