
கோலாலம்பூர், செப்டம்பர் 22 – வங்சா மாஜு LRT நிலையத்தில் இன்று காலை பயணி ஒருவர் மயக்கமடைந்து தண்டவாளத்தில் விழுந்த சம்பவத்தால் கெலானா ஜெயா வழித்தடத்தில் ரயில் சேவை சிறிது நேரம் தாமதமடைந்தது.
காலை 6.52 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக Rapid KL தெரிவித்துள்ளது.
பயணி தண்டவாளத்தில் விழுந்ததைத் தொடர்ந்து, அவசரகால பாதுகாப்பு அமைப்பு செயல்படுத்தப்பட்டு, தண்டவாளத்திற்கான மின்சார விநியோகம் தற்காலிகமாகத் துண்டிக்கப்பட்டது.
இதனால் கெலானா ஜெயா வழித்தடத்தில் ரயில் சேவை சிறிது நேரம் தாமதமடைந்தது.
இதனிடையே, தண்டவாளத்தில் விழுந்த பயணி பாதுகாப்பாக மீட்கப்பட்டு, ஆரம்பக்கட்ட சிகிச்சைக்காக அவசர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு செல்லப்பட்ட



