Latestமலேசியா

கிளாந்தானில் சக பணியாளருக்கு பாலியல் தொந்தரவு: சமையல்காரர் மீது 5 குற்றச்சாட்டுகள்

கிளாந்தான், ஜூலை 30 – கிளாந்தான் தும்பாட்டிலுள்ள ஒரு துரித உணவகத்தில் பணிபுரியும் 17 வயது சக பணியாளரிடம் பாலியல் தொந்தரவு செய்த 21 வயது சமையல்காரர் மீது ஐந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

அந்த ஆடவர், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டார். கடந்த ஜூன் 5 முதல் ஜூலை 17 வரை இந்தச் சம்பவங்கள் நடந்ததாக கூறப்படுகிறது.

குற்றச்சாட்டுகளை சந்தேக நபர் மறுத்துள்ள நிலையில் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் 8,000 ரிங்கிட் ஜாமீன் வழங்கப்பட்டதுடன், மாதந்தோறும் காவல் நிலையத்தில் ஆஜராகவும், சாட்சிகள் அல்லது பாதிக்கப்பட்டவரை தொடர்புகொள்ளக்கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கின் அடுத்த விசாரணை ஆகஸ்ட் 26-ஆம் தேதி நடைபெறும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!