Latestஉலகம்

குஜராத்தில் கொடூரம்: கணவரை சைனைட் கொடுத்துக் கொன்று கான்கிரீட்டில் புதைத்த மனைவி—3 பேர் கைது

காந்திநகர், ஆகஸ்ட்-2 – ஆஸ்திரேலியாவில் வேலை பார்த்து வருவதாக கூறி, இரண்டு ஆண்டுகளாக மறைக்கப்பட்ட பரபரப்பான கொலை சம்பவத்தின் பின்னணி இந்தியா, குஜராத்தில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

​குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள ஒரு தொழிற்பேட்டை கொட்டகையில், ஒரு அடி கனமுள்ள கான்கிரீட் தளத்திற்கு அடியில் 12 அடி ஆழத்தில் புதைக்கப்பட்டிருந்த ஜிக்னேஷ் மாவடியா என்பவரின் எலும்புக்கூட்டை போலீஸ் தோண்டி எடுத்துள்ளது.

​இந்த கொடூர சம்பவத்தில் ஜிக்னேஷின் மனைவி பிருத்வி, அவரது காதலன் மற்றும் கூட்டாளி ஆகிய மூவர் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2024 மே மாதம், மதுவில் சைனைட் விஷம் கலந்து ஜிக்னேஷ் கொல்லப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆனால், ​கணவர் ஆஸ்திரேலியாவில் வேலை செய்வதாகவும், அங்கு தொலைப்பேசியில் பேச அனுமதி இல்லை என்றும் கூறி மனைவி நாடகமாடி வந்துள்ளார்.

ஆனால், உறவினர் ஒருவர் ஆஸ்திரேலிய முகவரியைக் கேட்டபோது உண்மை அம்பலமாகி, போலீஸ் நிலைய புகார் வரை சென்றுள்ளது.

​மீட்கப்பட்ட எலும்புக்கூடு மரபணு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!