
ஜப்பான், ஆகஸ்ட் 4 – ஜப்பான் டோக்கியோவிலுள்ள தாமா (Tama) உயிரியல் பூங்காவில், கடும் வெப்பம் மற்றும் அதிக ஈரப்பதம் காரணமாக வெப்பத்தாக்கம் ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படும் நிலையில் மூன்று பெண் சிங்கங்கள் உயிரிழந்துள்ளன.
16 சிங்கங்களில் 10 சிங்கங்களுக்கு ஜூலை நடுப்பகுதியிலிருந்து உணவின்மை மற்றும் சோர்வு போன்ற அறிகுறிகள் தென்பட்ட நிலையில், மேலும் சில சிங்கங்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றன.
நீரிழப்பு மற்றும் பல உறுப்பு செயலிழப்பு காரணமாக வெப்பத்தாக்கம் ஏற்பட்டிருக்கலாம் என கால்நடை மருத்துவர் தெரிவித்தார். ஜப்பானில் அண்மைய வாரங்களில் சில பகுதிகளில் வெப்பநிலை 40°C-ஐ எட்டியுள்ள நிலையில், காலநிலை மாற்றத்தால் கடும் வெப்ப அலைகள் அதிகரித்து வருவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.



