
தெஹ்ரான், ஆகஸ்ட்-9,ஈரானிய உச்சத் தலைவர் மொஜ்தபா கமேனி, ஆதரவாளர்களிடம் பேசுவது போன்ற புதிய வீடியோ ஒன்றை அரசு செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இதில் அவர் ஆரோக்கியமாக இருப்பது போலத் தெரிகிறது.
மொஜ்தபாவின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்களில் செய்திகள் வெளியான சில நாட்களிலேயே இந்த வீடியோ வெளியாகியுள்ளது.
அவரது உடல்நிலை குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த வீடியோ வெளியிடப்பட்டிருந்தாலும், இது எப்போது எடுக்கப்பட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த வீடியோவில் தேதி குறிப்பிடப்படவில்லை என்பதால், இது அண்மையில் எடுக்கப்பட்டதா அல்லது அவர் உச்சத் தலைவராகப் பொறுப்பேற்பதற்கு முன்பு எடுக்கப்பட்டதா என்பதில் தெளிவில்லை.
தெஹ்ரான் தரப்பிலிருந்து கூடுதல் விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்படாத நிலையில், அனைத்துலகப் பார்வையாளர்கள் இந்தச் சூழலை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.



