Latestமலேசியா

மாணவரை அறைந்து காதைச் செவிடாக்கிய முன்னாள் ஆசிரியர்: RM88,000 நஷ்டஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

கோத்தா பாரு, ஆகஸ்ட்-11-மாணவரை 4 முறை அறைந்து, அவரது செவிப்பறையைக் கிழியச் செய்த முன்னாள் ஆசிரியருக்கு 88,000 ரிங்கிட் நஷ்டஈடு வழங்க கோத்தா பாரு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2019-ஆம் ஆண்டு இடைநிலைப் பள்ளி ஒன்றில், வீட்டுப்பாடம் செய்யவில்லை எனக் கூறி 14 வயது மாணவர் Mohamad Adam Maidin என்பவரை, ஆசிரியர் ஒருவர் பின்னாலிருந்து கன்னத்திலும் காதிலும் பலமாக அறைந்துள்ளார்.

​இந்தத் தாக்குதலால் மாணவரின் இடது செவிப்பறை கிழிந்து, அவருக்கு நிரந்தரக் காது கேட்கும் திறன் குறைபாடும் உளவியல் ரீதியான பாதிப்பும் ஏற்பட்டது.

பள்ளிக்குச் செல்லவே பயந்து ஒரே மாதத்தில் அம்மாணவர் வேறு பள்ளிக்கு மாற்றலாகிச் செல்லவும் நேர்ந்தது.

இதையடுத்து மாணவரின் தாயார் Isamuddin Ismail எனும் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது வழக்குத் தொடர்ந்தார்.

Adam-மின் பாதிப்பு மருத்துவ அறிக்கைகள் மூலம் நீதிமன்றத்திலும் உறுதிச் செய்யப்பட்டது.

​வழக்கை விசாரித்த நீதிபதி, இந்தத் தண்டனை சட்டவிரோதமானது, வரம்புமீறியது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது எனக் கூறி, பாதிக்கப்பட்ட மாணவருக்கு நஷ்டஈடு வழங்க உத்தரவிட்டார்.

பொது நஷ்டஈடு, முன்மாதிரித் தொகைக் அபராதம் மற்றும் மருத்துவச் செலவுகள் உட்பட மொத்தம் 88,000 ரிங்கிட்டை, தற்போது ஓய்வுப் பெற்று விட்ட 63 வயது அந்த ஆசிரியர் வழங்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!