Latestமலேசியா

கெளானா ஜெயா LRT பாதையில் ஏற்பட்ட தடங்கல் சீரானது; ரயில் சேவை வழக்கத்திற்குத் திரும்பியது

பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட்.13-Kelana Jaya LRT வழித்தடத்தில் ரயில் சேவை காலை 10.25 மணி முதல் வழக்க நிலைக்குத் திரும்பியிருப்பதாக RapidKL தெரிவித்திருக்கிறது.

முன்னதாக Taman Jaya நிலையத்திலிருந்து Universiti நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்த ரயில் ஒன்று நடுவழியில் பழுதடைந்ததால் சேவையில் தடங்கல் ஏற்பட்டது.

மாற்று நடவடிக்கையாக பாதிக்கப்பட்ட பயணிகளை RapidKL ஊழியர்கள் தண்டவாளத்தின் மறுபுறம் இருந்த மற்றொரு ரயிலில் ஏற்றி அருகில் இருந்த நிலையத்தில் பாதுகாப்பாக இறக்கி விட்டனர். அச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

பயணிகள் அனைவரிடமும் RapidKL மன்னிப்பு கோரியது. அதோடு ரயில் நின்றதற்கான காரணங்களைக் கண்டறிந்து அதனைச் சரி செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அது கூறியது.

அந்த ரயில் திடீரென நின்றதாகவும் அதற்கு முன் ஒரு பலத்த சத்தம் கேட்டதாகவும் முன்னதாக பயணி ஒருவர் தெரிவித்திருந்தார். அதனால் பயணிகள் பலர் நிலைதடுமாறி கீழே விழுந்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு முன் கடந்த ஜூன் 30 ஆம் தேதி Taman Jaya LRT நிலையத்தில், ரயிலின் மின்சார விநியோக அமைப்பில் சிக்கிய மெல்லிய உருகிய கம்பியால் சிறிய வெடிப்புச் சத்தம் ஏற்பட்ட சம்பவம் நிகழ்ந்தது.

உடனடியாக அந்த ரயில் சேவையிலிருந்து நீக்கப்பட்டு, பயணிகள் தங்கள் பயணத்தைத் தொடர மற்றொரு பெட்டிக்கு மாற்றப்பட்டனர்.

ஜூலை மாதம் Shah Alam வழித்தடத்தில் ரயிலின் பாகம் ஒன்று மின்சாரக் கடத்தியின் மீது உராய்ந்ததால் சிறிய வெடிப்பு போன்ற சத்தமும் தீப்பொறிகளும் தோன்றின. அதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!