
கோலாலம்பூர், நவம்பர்-14 – வீட்டுக்காவலில் உள்ள முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜீப் ரசாக், தனது நேற்று இல்லத்திலிருந்து வெளியாகி சுமார் 8 மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் ஜாலான் லங்காக் டூத்தா இல்லத்திற்குத் திரும்பினார்.
சிறைச்சாலை இலாகா வெளியிட்ட தகவலின்படி, நஜீப் நேற்று காலை கடுமையான பாதுகாப்புடன் தனது வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றார்.
வழக்கமான வெள்ளிக்கிழமை தொழுகை மட்டுமல்லாமல், அவரது இந்த வெளிப்பயணம் மொத்தம் 4 திட்டமிடப்பட்ட நடவடிக்கைகளை உள்ளடக்கியிருந்தது.
கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையின் எலும்பியல் துறையில் மருத்துவப் பரிசோதனை, JAKIM மத போதகருடன் குர்ஆன் ஓதும் வகுப்பு, மற்றும் உளவியல் ஆலோசனை அமர்வு ஆகியவை இதில் அடங்கும்.
அனைத்து நகர்வுகளும் நிலையான SOP நடைமுறை மற்றும் வீட்டுக்காவல் நிபந்தனைகளுக்குட்பட்டே மேற்கொள்ளப்பட்டதாகச் சிறைச்சாலை இலாகா உறுதிப்படுத்தியது.
அனைத்து அலுவல்களையும் முடித்துக்கொண்டு நஜீப் மாலை 6.25 மணியளவில் பாதுகாப்பாக வீடு திரும்பினார்.



