
சுபாங், ஆகஸ்ட் 13 – போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கடந்த மாதம் ஜகார்த்தாவில் கைது செய்யப்பட்ட 39 வயதான மலேசிய விமானியிடம் விசாரணை நடத்த மலேசிய அதிகாரிகளுக்கு இந்தோனேசியா அனுமதி வழங்கியுள்ளது.
உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுதீன் நசுதியோன் இஸ்மாயில் (Datuk Seri Saifuddin Nasution Ismail) கூறுகையில், இந்த அனுமதி மூலம் விசாரணையைத் தொடர முடியும் என்றும், விசாரணை தற்போது ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
அந்த விமானி 25 கிலோகிராம் போதைப்பொருளை கடத்த முயன்றதாக சந்தேகத்தின் பேரில், Soekarno-Hatta சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
இதனிடையே, நாட்டின் விமான நிலையங்களில் பாதுகாப்புக் கட்டுப்பாடுகளை வலுப்படுத்தும் விரிவான திட்டம் அடுத்த புதன்கிழமை அமைச்சரவையில் தாக்கல் செய்யப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.



