
நியூ யோர்க், ஆகஸ்ட்-15,ஈரானுடனான மோதல் முடிவுக்கு வந்ததும், அனைத்துலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்காவின் ஒரு வட்டாரமாக அறிவிக்கப்போவதாக அதிபர் டோனல்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
நியூ யோர்க்கில் நடைபெற்ற பேரணி ஒன்றில் பேசிய ட்ரம்ப், இந்தக் கடல் பாதையில் வாஷிங்டன் முழுமையான கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பதாகக் கூறிக் கொண்டார்.
ஏற்கனவே மோதல் முற்றியுள்ள நிலையில், இவரின் இப்பேச்சு மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனினும், ட்ரம்பின் இந்தக் கூற்றை ஈரான் வன்மையாக மறுத்துள்ளதுடன், ஹோர்முஸ் நீரிணை எப்போதும் தெஹ்ரானின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும் என்றும் தெளிவுப்படுத்தியுள்ளது.
உலகின் 20 விழுக்காடு எண்ணெய் மற்றும் எரிவாயு கொண்டு செல்லப்படும் இந்த நீர்வழியில் நிலவும் பதற்றம், அனைத்துலகச் சந்தையில் எரிபொருள் விலை உயர்வை ஏற்படுத்தி வருகிறது.



