
கோலாலம்பூர், ஆகஸ்ட்-17-சமூகப் பாதுகாப்பு குறித்த செய்திகளையும் விழிப்புணர்வையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஊடகவியலாளர்களின் பங்களிப்பைப் பாராட்டும் வகையில் பெர்க்கேஸோவின் 2026 ஊடக விருதளிப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மலேசிய பத்திரிகையாளர் கழகமான MPIயும் பெர்க்கேஸோவும் அதனை இணைந்து நடத்தவிருக்கின்றன. அது குறித்த அறிவிப்பு விழா இன்று கோலாலம்பூரில் நடைபெற்றது.
பெர்க்கேஸோ, தொழிலாளர்களுக்கு வேலை நேரங்களில் மட்டுமல்லாது, வேலை நேரத்தைத் தாண்டி முழுமையான பாதுகாப்பை வழங்கும் ‘iLINDUNGu 24 Jam’ என்ற புதிய திட்டத்தின் மூலம் சமூகப் பாதுகாப்பு விழிப்புணர்வை மேலும் வலுப்படுத்தி வருகிறது. அத்திட்டம் குறித்த துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்கள் பொதுமக்களைச் சென்றடைவதை உறுதி செய்ய, PERKESO மற்றும் MPI இடையிலான இந்த கூட்டு முயற்சி பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுவதாக பெர்க்கேஸோவின் நிர்வாக துணைத் தலைவர் Edmund Cheong Peck Huang தெரிவித்தார்.
PERKESO iLINDUNGu ஊடக விருதளிப்பில் Anugerah Kencana PERKESO LINDUNG Semua, முதன்மை விருதாக வழங்கப்படவிருக்கிறது. வெற்றி பெறுபவருக்கு 10,000 ரிங்கிட் ரொக்கப் பரிசும் கோப்பையும் வழங்கப்படும். சிறந்த தொலைக்காட்சி & வீடியோ அறிக்கை, சிறந்த வானொலி & பாட்காஸ்ட் அறிக்கை, சிறந்த அச்சு ஊடக அறிக்கை, சிறந்த இணையப் போர்ட்டல் அறிக்கை, சிறந்த புகைப்படம் ஆகிய பிரிவுகளிலும் விருதுகள் வழங்கப்படவிருக்கின்றன. முதல் இடத்தை வெல்வோருக்கு 5,000 ரிங்கிட்டும் கோப்பையும் இரண்டாம் இடத்தைப் பெறுவோருக்கு 2,000 ரிங்கிட்டும் கோப்பையும் மூன்றாவதாக வருவோருக்கு 1,000 ரிங்கிட்டும் கோப்பையும் கிடைக்கும். விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 20 அக்டோபர் 2026 ஆகும். [https://mpi.my/award/perkeso](https://mpi.my/award/perkeso) அல்லது தொடர்பு எண்கள் / மின்னஞ்சல்: +603-86892712 | bukitledangmpi@yahoo.com ஆகியவற்றில் கூடுதல் விவரங்களைப் பெறலாம்.



