
புதுடெல்லி, ஆகஸ்ட் 18 – ஏர் இந்தியாவைச் சேர்ந்த மேலும் இரு விமானிகள் கட்டாய போதைப்பொருள் ஆரம்பப் பரிசோதனையில், போதைப்பொருள் உட்கொண்டிருந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, உறுதிப்படுத்தும் பரிசோதனை முடியும் வரை இருவரும் விமானப் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
சுமார் 400 விமானிகள் இதுவரை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி புக்கெட்டிலிருந்து (Phuket) புதுடெல்லி சென்ற ஏர் இந்தியா விமானம் கடும் காற்றுக் கொந்தளிப்பை எதிர்கொண்டதில் 24 பேர் காயமடைந்தனர்.
அந்த விமானத்தை இயக்கிய விமானி இரு சிறுநீர் பரிசோதனைகளிலும் தோல்வியடைந்ததுடன், அவரது உடலில் கஞ்சா இருப்பதும் கண்டறியப்பட்டது. இதையடுத்து அனைத்து ஏர் இந்தியா விமானிகளுக்கும் போதைப்பொருள் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டது.



