Latestமலேசியா

மானிய சமையல் எண்ணெயை பூஜை எண்ணெயாக மாற்றி மோசடி: 9 டன் எண்ணெயை பறிமுதல் செய்த KPDN

கோலாலம்பூர், ஆகஸ்ட்-19-மானிய விலையிலான சமையல் எண்ணெயை பாட்டில்களில் மாற்றி அடைத்து, பூஜைக்கான எண்ணெயாக அதிக விலைக்கு விற்று வந்த கும்பலை உள்நாட்டு வாணிப மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சான KPDN முறியடித்துள்ளது.

​கோலாலம்பூர் செந்தூல் மற்றும் சௌகிட் பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனைகளில், சுமார் 165,000 ரிங்கிட் மதிப்புடைய 9 டன் சமையல் எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது.

​இரு மாத உளவுத் தகவல்களின் அடிப்படையில் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கோலாலம்பூர் KPDN துணை இயக்குநர் Mohd Shahran Mohd Arshad தெரிவித்தார்.

​ஒரு கிலோ மானிய எண்ணெய் பாக்கெட்டுகளை 2 ரிங்கிட் 45 சென்னுக்கு வாங்கிய அக்கும்பல், அதை பாட்டில்களில் அடைத்து கிள்ளான் பள்ளத்தாக்கு சில்லறை விற்பனையாளர்களுக்கு 7 ரிங்கிட் 50 சென்னுக்கு விற்று வந்துள்ளது.

​ஒரே வளாகத்தில் மட்டும் நாள்தோறும் சுமார் ஒரு டன் மானிய எண்ணெய் இவ்வாறு மறுசுழற்சி முறையில் பாட்டில்களில் அடைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ​அரசாங்கத்தின் மானியப் பொருட்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க, Ops Tiris 4.0 சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என்று அமைச்சு எச்சரித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!