
கூலாய், ஆகஸ்ட்-24-இரண்டாவது ஜோகூர் பாலமான Linkedua நெடுஞ்சாலையை மறித்து சட்டவிரோத மோட்டார் பந்தயம் நடத்திய விவகாரம் தொடர்பாக 8 பேரை போலீஸார் கைதுச் செய்துள்ளனர்.
சட்டவிரோத பந்தயத்திற்காக நெடுஞ்சாலையில் செல்லும் பிற வாகனங்களை ஒரு கும்பல் தடுத்து நிறுத்தும் 30 வினாடி வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து ஜோகூர் போலீஸ் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.
கைதுச் செய்யப்பட்ட 26 முதல் 45 வயதுக்குட்பட்ட 8 சந்தேக நபர்களும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவர் என கூலாய் மாவட்டப் போலீஸ் தலைவர் தான் செங் லீ (Tan Seng Lee) தெரிவித்தார்.
மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடைய பிற நபர்களையும் நேரில் கண்ட சாட்சிகளையும் போலீஸார் தீவிரமாக அடையாளம் கண்டு தேடி வருகின்றனர்.



